2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வதே இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றாலும் ஆட்சியை கவனிப்பேன் என முதல்-அமைச்சர் பேசினார்.;

Update:2024-08-16 12:00 IST

சென்னை,

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

"தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம். அதனை வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றாலும் ஆட்சியை கவனிப்பேன். கட்சியையும், ஆட்சியையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பேன். திமுகவை சேர்ந்த சில மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரனை நடத்தப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்