தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சம் இன்றி 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.