"ஜெயலலிதா பல்கலை. பெயர் மாற்றம்" சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.;

Update: 2023-11-18 07:50 GMT

சென்னை,

கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

 

Full View
Tags:    

மேலும் செய்திகள்