அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்; நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வருகிற 17, 20 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் 20-ந் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி கலந்துகொள்கிறார்.;

Update:2022-10-09 03:55 IST

51-வது ஆண்டு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, வருகிற 17-ந்தேதியன்று 51-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு 17-ந்தேதி, 20-ந்தேதி மற்றும் 26-ந்தேதி ஆகிய 3 நாட்கள் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள், கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு கொண்டிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும், அமைப்புகள் செயல்பட்டுகொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுகொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 17-ந்தேதியன்று ஆங்காங்கே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும், ஏழை-எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, அ.தி.மு.க. பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுபவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 20-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.

திருவள்ளூர், காஞ்சீபுரம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 17-ந்தேதியன்று நடக்கும் கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சி.பொன்னையன், சென்னை புறநகர் மாவட்டத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தில் அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா, தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தில் வக்கீல் பிரிவு தலைவர் வி.எஸ்.சேதுராமன், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் ஆர்.கமலக்கண்ணன ஆகியோர் பேசுகின்றனர்.

ஜெயக்குமார்-கே.பாண்டியராஜன்

20-ந்தேதியன்று வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் அமைப்பு செயலாளர் பென்ஜமின், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில் மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் பேசுகின்றனர்.

26-ந்தேதியன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன், தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் கா.சங்கரதாஸ், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளர் கே.பாண்டியராஜன், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளர் சா.கலைப்புனிதன் ஆகியோர் பேசுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்