அதிமுக எழுச்சி மாநாடு: தலையில் இரட்டை இலை போல் கட்டிங் செய்து வந்த சேலம் தொண்டர்..!
அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுச்சி உரையாற்றுகிறார்.;
மதுரை,
தமிழ்நாட்டையே பிரமிக்க செய்யும் வகையில் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு இன்று காலை முதல் தொடங்கி விமரிசையாகவும், எழுச்சியோடும் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் சாரை சாரையாக வந்து மாநாட்டு பந்தலில் குவிந்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட உள்ளனர். இதற்காக அவர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடும் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுச்சி உரையாற்றுகிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க.வினர் உள்ளனர்.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டிற்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் இரட்டை இலை சின்னத்தை போல் தலையில் முடி வெட்டி வந்துள்ளார். இவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.