அதிமுக பெயர், கொடி, சின்னம்: ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு

அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.;

Update: 2023-09-20 15:09 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

அ.தி.மு.க. பொது செயலாளர் என தன்னை ஐகோர்ட் கோர்ட், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன் அ.தி.மு.க.,வின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. எனவே அதிமுக பெயர் மற்றும் கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மனு மீதான விசாரணை நாளை (செப்.21) நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்