உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு பால், மின் கட்டண உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு பால், மின் கட்டண உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.;

Update: 2022-12-13 21:02 GMT


உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு பால், மின் கட்டண உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க.வை கண்டித்து காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசியதாவது:-

தற்போது தமிழகம் முழுவதும் வீட்டு வரி அதிகளவில் உயர்த்தப்பட்டு உள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்று விடலாமா என தோன்றுகிறது.

தமிழகத்திலேயே மக்கள் தி.மு.க. ஆட்சியில் தினமும் அல்லாடி வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியிலும் தி.மு.க. ஆட்சியை அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். தமிழக மக்கள் கஷ்டப்படுவது போதாதா? புதுச்சேரியும் கஷ்டப்பட வேண்டுமா? என்பதை மு.க.ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாக்குறுதி

தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் ஆதார் எண்ணை, மின் அட்டையோடு இணைப்போம் என்று சொன்னீர்களா? மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ளனர்.

விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின் போது முதல்-அமைச்சர் சரிசெய்வேன் என ஞான உதயம் வந்து அறிவிக்க வேண்டும் என மீனாட்சி அம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

உதயநிதிக்கு பட்டாபிஷேகம், மக்களுக்கு வரி சுமையா?. கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி ஆகிவிட்டது தி.மு.க. கட்சி. நாளைய தினம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய உள்ளார்கள்.

வரிவிலக்கு

முன்பு மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அது போல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்துவரி, மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். முடிசூட்டு விழாவின் போதாவது தி.மு.க. அரசு. மக்களுக்கு இனிப்பான செய்தியை சொல்ல வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்