பாசி படர்ந்துள்ள வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாசி படர்ந்துள்ள வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு;

Update: 2023-07-26 18:45 GMT

தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி செய்துள்ள வயல்களில் பாசி படர்ந்துள்ளது. இதனை வேளாண்மைதுறை இணை இயக்குனர் தேவேந்திரன், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சந்திரசேகரன், தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, வேளாண்மை அலுவலர் நவீன், விதை அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினர்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா கூறுகையில், வேதாரண்யம் தாலுகா பகுதியில் குறுவை சாகுபடி வயலில் ஆடை பாசி அதிகமாக படர்ந்து உள்ளது. மேலும் தலைஞாயிறு ஐந்தாம் சேத்தி பகுதி வயல்களில் குறுவை சாகுபடியில் அதிக அளவில் ஆடை பாசி காணப்படுகிறது. ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டை (மயில்துத்தம்) 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராக தூவ வேண்டும். இந்த மருந்தை முடிச்சு முடிச்சாக கட்டி வயலில் ஆங்காங்கே இடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயலில் பாசி படர்வதை தவிர்த்து பயிரைக்காப்பாற்றலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்