விவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும்
பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.;
எஸ்.புதூர்,
பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எஸ்.புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுப்பிக்க வேண்டும்
பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் பெற பதிவு செய்து நிதி பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் இதுவரை 11 தவணை அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது, தற்போது 12-வது தவணை பெறுவதற்கு விவசாயிகள் நில ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம். பயனாளியின் நில ஆவணங்களை தமிழ் நிலம் இணையதளத்துடன் ஒப்பீடு செய்து சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சரிபார்ப்பு
எனவே, இதில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் காண்பித்து சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.
இனி வரும் காலங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு மட்டுமே நிதி வரவு வைக்கப்படும் எனவும், ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்து பிரதமரின் கவுரவ நிதி பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.