முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் வேளாண்மை மேளா

முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் வேளாண்மை மேளா நடைபெற்றது.

Update: 2023-10-07 18:01 GMT

கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமாக தோகைமலை வட்டாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த 30-ந்தேதி முதல் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தின் கீழ் தோகைமலை வட்டாரத்தில் புழுதேரி ஊராட்சியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மேளா நடத்தப்பட்டது. அப்போது இந்த வட்டாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, உழவர் உற்பத்திக்குழு வேளாண் அறிவியல் நிலையம், பொது சேவை மையம் மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனம் மூலம் கருத்துக்காட்சி அமைக்கப்பட்டது.இதில் கரூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் உமாசங்கர், வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மதன்குமார் மற்றும் தோகைமலை வட்டார தோட்டக்கலை அலுவலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்