விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-18 18:45 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலியை தொடர்ந்து குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பிள்ளை ராஜா தலைமை தாங்கினார். இதில் 100 நாள் வேலையில் 3 மாதங்களாக கொடுக்கப்படாத கூலியை உடனடியாக கொடுத்திட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். விரகாலூர் கிராமத்தில் வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், தினம் ரூ.800 கூலி வழங்கிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்