விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-16 19:00 GMT

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் வசந்தாமணி, பொருளாளர் ரவிசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாய தொழிலாளர்களுக்கு தனியாக அரசு துறையை உருவாக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச கூலியாக விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.600 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் வேலைநாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்