ரூ.210 கோடி மதிப்பீட்டில் வேளாண் கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
வேளாண் கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் ரூ. 210 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியதுடன், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.