அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் பிரதமர் நரேந்திரமோடி உருவப்படம் எரிப்பு

அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் நரேந்திரமோடி உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

Update: 2022-06-18 16:11 GMT

அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் நரேந்திரமோடி உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டமும், வன்முறையும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்கார வேலன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

உருவப்படம் எரிப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் நரேந்திரமோடியின் உருவப்படத்தை கையில் ஏந்தியவாறு அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

அப்போது திடீரென்று பிரதமர் நரேந்திரமோடி உருவப்படத்தை கிழித்து தீயிட்டு எரித்தனர். உடனடியாக அவர்களை மயிலாடுதுறை போலீசார் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்