மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்க கூடாது. கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாய்மேடு-திருமருகல்
இதேபோல் வாய்மேடு அருகே உள்ள தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வேணு, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருமருகல் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருமருகல் ஒன்றிய அலுவலக வாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கீழையூர்- கீழ்வேளூர்
கீழையூர் கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். கீழ்வேளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.