பொதுமக்களை திரட்டி போராட்டம்

பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

Update: 2023-06-22 18:45 GMT

நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- நாகை கோட்டைவாசல் படி அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதன் மூலம் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரித்து குளோரின் கலந்த நீராக கடலுக்கு அனுப்புவது இந்த திட்டமாகும். இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்ய முடியாமல் ஆறாக ஓடுகிறது. அருகே நகராட்சி பூங்கா, மின்வாரிய அலுவலகம், திருமண மண்டபம் குடியிருப்புகள் உள்ளதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாகையில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை உடனே சரி செய்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். கூட்டத்தில் நகர செயலாளர் வெங்கடேசன், வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் அருள் தாஸ் மாவட்ட பொருளாளர் பாலு உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்