வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்;

Update: 2022-09-21 18:45 GMT

திருத்துறைப்பூண்டி கடைமடை பகுதியாகும். இங்கு ஓவரூர் வடிகால் வாய்க்கால் மற்றும் வளவனாறு உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். தற்ேபாது ஓவரூர் வடிகால் வாய்க்காலை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து புதர்மண்டி காணப்பட்டது. இதனால் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதனை அறிந்த கீழப்பெருமழை கிராம விவசாயிகள் தனது சொந்த செலவில் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை பொக்லின் எந்திரம் மூலம் தூர்வார முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களாக விவசாயிகள் தங்களது சொந்த செலவில் ஆகாயத்தாமரைகளை பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்