ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீட்பு
தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டு பகுதியில் தவித்த ஒரே குடும்பத்தை ே்சர்ந்த 3 அகதிகள் மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டு பகுதியில் தவித்த ஒரே குடும்பத்தை ே்சர்ந்த 3 அகதிகள் மீட்கப்பட்டனர்.
மணல் திட்டில் தவிப்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டில் அகதிகள் தவிப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன் போலீசார் விரைந்து சென்று, மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்டு படகில் ஏற்றி தனுஷ்கோடி அழைத்து வந்து, ராமேசுவரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் 3 பேரும், மண்டபம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து ெசல்லப்பட்டு தீவிரமாக விசாரணை நடந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி (வயது 42), இவருடைய மகன் அஜந்தன் (17) மகள் சுரபி (11) ஆகியோர் என்பது தெரியவந்தது.
முகாமில் ஒப்படைப்பு
இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதாலும், அங்கு வேலைவாய்ப்பு இல்லாததாலும், கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் அங்கு வாழப்பிடிக்காமல், தமிழகத்தில் வசித்துவரும் உறவினர்களோடு சேர்ந்து வாழ தப்பி வந்ததாகவும், இதற்காக படகோட்டிக்கு இலங்கை பணம் ரூ.2 லட்சம் கொடுத்ததாக சாந்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் 3 பேரும், மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டனர்.