திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் தலைநிமிர தொடங்கி விட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் தலைநிமிர தொடங்கி விட்டது என மு.க. ஸ்டாலின் கூறினார்;

Update: 2022-06-03 13:43 GMT

சென்னை,

சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் - அமைச்சர் முக ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார் .

அதன்பிறகு பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது ;

திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் தலைநிமிர தொடங்கி விட்டது.பேச்சு, கவிதைக்கு தற்போது மரியாதை உயர்ந்துள்ளது; இந்த போட்டிகளை பார்த்தபோது, எனது கல்லூரி கால நினைவுக்கு சென்று விட்டேன்.மொழி, இனத்துக்காக உயிரை விடும் சூழல் வந்தால் அந்த தியாகத்தை செய்ய நான் தயார்.இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்