தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் வசமாகும்: அண்ணாமலை

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் உள்ளனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார்.

Update: 2024-04-13 06:58 GMT

தேனி,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனே போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:-

ஒப்பந்ததாரர்களுக்காக நடத்தப்படும் கட்சி என்னவென்றால் அது அ.தி.மு.க.தான். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அ.தி.மு.க.வை ஒப்பந்தரார்களுக்கு தாரை வார்த்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் நிறுத்தியிருக்கிற வேட்பாளர்களை பார்த்தாலே இது தெரியும். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு அதிமுக டி.டி.வி. தினகரன் வசமாகும். டி.டி.வி. தினகரன் கையில் அ.தி.மு.க. சென்றிருந்தால் ஸ்டாலின் முதல் அமைச்சராகியிருக்க மாட்டார்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்