பருத்தி, உளுந்து மகசூல் பாதிப்பு

ஆலங்குளம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலினால் பருத்தி, உளுந்து ஆகியவற்றில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-04-17 19:43 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலினால் பருத்தி, உளுந்து ஆகியவற்றில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

பருத்தி சாகுபடி

ஆலங்குளம், தொம்பகுளம், ரெட்டியபட்டி, கொங்கன்குளம். கீழராஜகுலராமன். சாமிநாதபுரம். நல்லக்கம்மாள்புரம். காளவாசல், கரிசல்குளம், கண்மாய் பட்டி, வலையபட்டி, மேலாண்மறை நாடு, அப்பயநாயக்கர் பட்டி, அருணாசலபுரம், நரிக்குளம், கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், கல்லமநாயக்கர்பட்டி, கோபாலபுரம், புளியடிப்பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்பு பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், நதிக்குடி ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் பருத்தி, உளுந்து ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்கள் பூக்கள் பூத்து காய்கள் கட்டவேண்டிய பருவத்தில் உள்ளது.

மகசூல் பாதிப்பு

இந்தநிலையில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்ெடரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கின்றது.

கடும் வெயில் காரணமாக பருத்தி, உளுந்து செடிகளில் உள்ள பூக்கள் கருகி உதிர்ந்த நிலையில் உள்ளது. இதனால் பருத்தி, உளுந்து செடிகளில் காய்கள் கட்டவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆலங்குளம் பகுதியில் கடும் வெயில் காரணமாக பருத்தி, உளுந்து மகசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிணறுகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. பயிர்களுக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில் போதுமான தண்ணீர் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு பயிர்களை காப்பாற்ற உரிய ஆலோசனை வழங்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்