ஊட்டி கோர்ட்டு வளாகத்தில் மயங்கி விழுந்த வக்கீல் சாவு

ஊட்டி கோர்ட்டு வளாகத்தில் மயங்கி விழுந்த வக்கீல் சாவு;

Update: 2023-02-16 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அர்சுணன் (வயது 55). இவர், கூடலூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.. இந்தநிலையில் வழக்கு நேற்று ஊட்டி காக்கதோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த புதிய மாவட்ட கோர்ட்டுக்கு வந்தார். அப்போது கோர்ட்டு வளாகத்திற்குள் வந்த அவர் திடீரென மயங்கி கிழே விழுந்தார். இதனை பார்த்த வக்கீல்கள், நீதிபதியின் பாதுகாவலர் மற்றும் ஊழியர்கள் அவரை உடனடியாக தூக்கி மேஜை மீது படுக்க வைத்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

ஆனால், அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனால், உடனடியாக அவர் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அர்சுணன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்