ஆலோசனை கூட்டம்

கடையநல்லூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-04 19:00 GMT

கடையநல்லூர்:

சிற்றாறு நதியின் சிறப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குற்றாலத்தில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் மற்றும் முண்டகக்கண்ணி அம்மன் அறக்கட்டளை சார்பில் ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தீபஆரத்தி பெருவிழா நடக்கிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பாலீஸ்வரன், கார்த்திக்ராஜா, கண்ணன், அருணாசலம், பரமசிவன், ராமநாதன், வடிவேல், சேகர்பாண்டியன், செந்தில், முத்துகாமுத்துரை, முத்துராஜா, முத்துக்குமார், ரேவதி பாலீஸ்வரன், மங்கையர்கரசி, பாண்டித்துரை, மாரி, சுப்பிரமணியன், கார்த்திக், செல்வகுமார், சுப்பிரமணியன் என்ற குட்டி, நெடுவயல் முப்புடாதி, சிவராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 11-ந் தேதி குற்றாலத்தில் வைத்து மடாதிபதிகள் தலைமையில் தீபஆரத்தி குறித்த அழைப்பிதழ் வெளியிடுவது, தீப ஆராத்திக்கு தமிழ்நாடு, தெலுங்கானா, உள்ளிட்ட 4 மாநில கவர்னர்களை அழைப்பது, தென்காசி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைப்பது, அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்