முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந்தேதி நெல்லை வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி நெல்லைக்கு வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து மேயர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது;

Update: 2022-08-29 21:13 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி நெல்லைக்கு வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து மேயர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி நெல்லைக்கு வருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் சரவணன் பேசுகையில் கூறியதாவது:-

ஏற்பாடு தயார்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்திற்கு வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) வருகிறார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கின்ற விழாவில் நெல்லை மாவட்டம் முழுவதும் அரசுத்துறை வாரியாக முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார். மேலும் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்க உள்ளார்.

குடிநீர் வசதி

விழா நடைபெறும் மைதானத்தை சமன்படுத்தி, அந்த பகுதி சாலைகளில் தூய்மை பணி், விழாவிற்கு வரவிருக்கின்ற பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும். தெரு விளக்குகள் சீராக இயங்கிடவும் ஏற்கனவே ஆணையாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து பணிகளையும் கவனமுடன் மேற்கொண்டு முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழா சிறப்பாக நடைபெற மாநகராட்சி சார்பாக செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், லெனின், பைஜூ, ராமசாமி, மாநகர நல அலுவலர் ஆனி குயின், சுகாதார அலுவலர்கள் சாகுல் ஹமிது, இளங்கோ, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்