18 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆலோசனை

அரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆலோசனை வழங்கினர்.;

Update: 2022-07-01 16:12 GMT

அரூர்:

அரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து தொழில் அதிபர்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் சூர்யா தனபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை தொழில் அதிபர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 18 வார்டுகளிலும் பொருத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அருள்மொழி, பாபு என்ற அறிவழகன், உமாராணி, மகாலட்சுமி, ராணி, கலைவாணன், சரிதா, பெருமாள், பூபதி அன்பழகன், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்