வாலிபர் மாயம்

வாலிபர் மாயம் ஆனார்.;

Update: 2023-10-05 18:29 GMT

புன்னம் சத்திரம் அருகே சின்னரெங்கம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமுத்து (வயது 35). தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிமுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி, மணிமுத்துவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிமுத்துவின் சகோதரி முனீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிந்து, மாயமான மணிமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்