அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் ஆலோசனை கூட்டம்

கலசபாக்கம் அருகே அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.

Update: 2023-10-24 18:45 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலசபாக்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களை உள்ளடக்கி காஞ்சி கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டம் அமைப்பது செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான துரைசெந்தில் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடக்க உள்ளதால் நமது இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் தற்போது உள்ள இதே உற்சாகத்துடன் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்ய இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்றார்.

 நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாநில மகளிர் அணி இணை செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பர்வதம், முன்னாள் எம்.எல்.ஏ. நளினி, ஒன்றிய செயலாளர்கள் கலசபாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், புதுப்பாளையம் வக்கீல் ரமேஷ், மூர்த்தி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் துரை, முன்னாள் இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் பழனிராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் எழில்மாறன்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், அண்ணாமலை, ஜான்பாஷா, முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்