அ.தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

Update: 2022-10-09 18:45 GMT

திருமருகல் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் திட்டச்சேரி நகர மகளிர் அணி ஆலோசனை கூட்டம் திருமருகலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன், தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் இளவரசி தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமனம் செய்ய வேண்டும். போதை பொருட்களை தடுக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் அணியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகி இந்திரா அருள்மணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்