'அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தே தீரும்'

‘எத்தனை தடைகள் வந்தாலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தே தீரும்’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.;

Update: 2022-07-05 16:01 GMT

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பேசுகையில், பொதுக்குழு கூட்டத்துக்கு ஓ. பன்னீர்செல்வத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. எவ்வளவு எதிர்ப்புகள், எத்தனை தடைகள் வந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடந்தே தீரும், என்றார்.

இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்