அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-06-21 18:45 GMT


அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யவேண்டும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் என்.எம்.ராஜா வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன், ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர்கள் கொத்தங்குளம் கருப்பையா, பில்லூர் ராமசாமி, கோமதிதேவராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர் ராமு. இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியார்தாஸ், செல்லமணி கே.எம்.கோபி, சிவாஜி, நகர் செயலாளர்கள் ராமச்சந்திரன், மெய்யப்பன், விஜிபோஸ், வர்த்தக அணி செயலாளர் கே.பி. ராஜேந்திரன், பேரவை மாவட்ட இணை செயலாளர் ஆா்.எம்.எல். மாரி,மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், மகளிர் அணி செயலாளர் ஜாக்குலீன், செயற்குழு உறுப்பினர் புதுப்பட்டி சிவா மற்றும் வெண்ணிலா, வக்கீல் ராஜா, பாசறை பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்