திருவள்ளூர், பொன்னேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், பொன்னேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-05-30 15:00 IST

கள்ளச்சாராய இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் போன்றவற்றை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.பி.க்கள் பி.வேணுகோபால், கோ.அரி, மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் சிறுணியம்பலராமன் தலைமையில் நடந்தது. ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர், பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், அவைத்தலைவர் பா.ராஜேந்திரன், பகுதி செயலாளர் அஜாக்ஸ் எஸ்.பரமசிவம், மாநகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் கே. கார்த்திக், முல்லை ராஜேஷ், ஸ்ரீதரன், வக்கீல் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஆர்.ரமேஷ்பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர், "கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்து, மின் கட்டணம், பால் விலை உயர்வை ரத்து செய், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டு" என கோஷமிட்டனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில் அம்பத்தூர் ஓ.டி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், பகுதி செயலாளர் கே.பி.முகுந்தன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்