விருதுநகரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வலியுறுத்தியும் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் கா.ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மான்ராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திர பிரபா, எதிர்கோட்டை சுப்பிரமணியம், விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.