தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-21 19:00 GMT

தென்காசி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சொத்து வரியை குறைக்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி முன்னிலை வகித்தார். தென்காசி நகர செயலாளர் சுடலை வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பிரபாகரன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவசீதாராமன், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாத பாண்டியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்