மின்கட்டண உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-07-25 07:07 GMT

ராமநாதபுரம்

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க  சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சதன் பிரபாகர், முத்தையா, கழக மகளிர் அணி மாநில இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்