அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வாணியம்பாடியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2023-01-22 15:14 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஜின்னா மேம்பாலம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் டி.சாம்ராஜ் (நாட்றம்பள்ளி கிழக்கு), சி.செல்வம் (திருப்பத்தூர் வடக்கு), பொதுக்குழு உறுப்பினர் பி.மகேந்திரன், ஆலங்காயம் பேரூர் செயலாளர் பி.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜி.சதாசிவம் வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி. சம்பத்குமார், கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.பிரபு, தலைமை கழக பேச்சாளர் தோவாலா மா.ரவி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது தி.மு.க. எப்பொல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் பொய்யான வாக்குறுதிகள், சந்தர்ப்ப சூழ்நிலையை முன்னிறுத்தி ஆட்சிக்கு வருகின்றனர். ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர் என்றார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி.ஏ.டில்லி பாபு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் ஆர்.சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்