அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாப்பாக்குடி, கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது;

Update: 2023-06-25 19:29 GMT

தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முக்கூடல் பேரூராட்சி, பாப்பாக்குடி ஒன்றியம், கடையம் தெற்கு ஒன்றியம், ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முக்கூடல் பேரூர் கழக சார்பில் நிஷா என்ற அனுஷா, ஆதிமூலம், ஆதி கணேஷ் மற்றும் வார்டு செயலாளர்கள், ஒன்றிய கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்