அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்காழியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது;
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் கோவில் பகுதியில் நகர அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு நகர கழக செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பரணிதரன், நிர்வாகிகள் அரிமாதமிழன், ராமு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் பிரகாசம் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட அவை தலைவருமான பாரதி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு செயலாளர் சுரேஷ், ரவிசண்முகம், வக்கீல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.