அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

கடையநல்லூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது ெதாடர்பாக அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2022-07-22 16:12 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் வருகிற 25-ந் தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமையில் கடையநல்லூரில் நடைபெற்றது. நகர செயலாளர் எம்.கே.முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் கடையநல்லூரைச் சேர்ந்த 33 வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்