அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பெரம்பலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்ச்செல்வன் பேசுகையில், புதிய மாவட்ட செயலாளராக என்னை அறிவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரின் கரத்தை வலுப்படுத்துவோம். பெரம்பலூர் மாவட்டத்தை மீண்டும் அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற கட்சியினர் ஒன்றாக இணைந்து பாடுபடுவோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவும், அடுத்த சட்டமன்ற தோ்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கவும் பாடுபடுவோம், என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்களான கட்சியின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் மருதராஜா, மாவட்ட துணை செயலாளர் சந்திரகாசி, மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பூவை.செழியன், அவைத்தலைவர் குன்னம் குணசீலன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் எம்.என்.ராசாராம் உள்ளிட்ட நிர்வாகிகளும், கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.