அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-07-26 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு விழாவிற்கு செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் வி.பி. மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா். மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த் வரவேற்றார்.

கூட்டத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசுகையில், வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதியில் மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாடு என்பது நமது கழகத்தின் குடும்ப விழா. எனவே நாம் அந்த விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் இருந்து சுமார் 300 வாகனங்களுக்கு மேல் செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டல செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட சார்பு அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்,ஆர்,ராமச்சந்திரன், செல்லப்பன், வாசுதேவன், ஜெயகுமார், வசந்தம் முத்துபாண்டியன், ரமேஷ், மகாராஜன், துரைபாண்டியன், செல்வராஜ், வேல்முருகன், நகர செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், எம்.கே.முருகன், பேரூர் கழக செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், சேவுகபாண்டியன், முத்துக்குட்டி, நல்லமுத்து, பாலசுப்பிரமணியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வழக்கறிஞர் அருண் சுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் ஆத்மாநாதன், பாலசுப்பிரமணியன் ஒன்றிய கவுன்சிலர் சத்யகலா, டாக்டர் திலீபன் மற்றும் நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்