அ.தி.மு.க. கல்வெட்டு சேதம்; போலீசில் புகார்
அ.தி.மு.க. கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி:
திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிராட்டியூர் பகுதியில் காவல் உதவி மையம் அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பத்துடன் கூடிய கல்வெட்டு இருந்தது. இந்த கல்வெட்டை நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் சேதப்படுத்தி இருந்தார். இது பற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று காலை அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலீசார் அங்கு சென்று கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்து வட்ட செயலாளர் அமீர்பாஷா கொடுத்த புகாரின்பேரில், கல்வெட்டை சேதப்படுத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.