தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில்5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.;

Update: 2023-04-12 18:45 GMT

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது மைல், பழைய மாநகராட்சி அருகில், திரேஸ்புரம், டூவிபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை, முன்னாள் அரசு வக்கீல்கள் ஆண்ட்ருமணி, சுகந்தன்ஆதித்தன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்