தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணி
தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆய்வு செய்தார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தி வருகிறார். அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் உள்ள வார்டுகளில் பூத் கமிட்டி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை குழு, மகளிர் குழு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வார்டு வாரியாக நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை உள்பட பலர் உடன் இருந்தனர்.