தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது-மா.சுப்பிரமணியன்
தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று ஈரோட்டில் மா.சுப்பிரமணியன் கூறினார்.;
ஈரோடு,
ஈரோட்டில் முதல் -அமைச்சர் பிரசார பயணம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி அட்டவனை தயாரித்து முறைப்படி அறிவிப்பார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக யார் புகார் அளிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சைதாப்பேட்டை தேர்தலின்போது அப்போது இருந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் வாக்குக்சாவடிக்குள் சென்று வாக்களித்தை மக்கள் யாரும் மறக்கமாட்டார்கள். அப்போது தமிழகம் பீகாராக மாறியது என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தது. எனவே தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்தஒரு விதிமுறைகளும் மீறப்படவில்லை. தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது"என்றார்.