அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

அம்பையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2023-09-16 20:21 GMT

அம்பை:

அம்பை நகர அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கல்யாணி திரையரங்கம் எதிரில் நடந்தது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலை வகித்தார். அம்பை நகர செயலாளர் அறிவழகன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்புரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் சுந்தரபாண்டியன் பேசினார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜயபாலாஜி, சேரை மாரிசெல்வம், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்