அ.தி.மு.க. மாநாட்டு திடலில் முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு

அ.தி.மு.க. மாநாட்டு திடலில் முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-08-08 00:55 GMT


மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20-ந் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனை முன்னாள் அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினர். அதில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் அவர்கள் மாநாட்டிற்கு வாகனம் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கான உணவு கூடங்களை பார்வையிட்டனர். மேலும் மாநாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான நடமாடும் கழிப்பறை வாகனம், பாதுகாப்பு, கண்காட்சிக் கூடங்கள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளைஅவர்கள் மேற்கொண்டனர். அதில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், சிவகங்கை மாவட்ட செந்தில்நாதன், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்