அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுதல்
சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுதல் கூறினார்
திருவெண்காடு:
மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, திருவெண்காடு மற்றும் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான பவுன்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர், 'சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏராளமான குடிசை வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார். அப்போது முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.