அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-05-29 19:32 GMT

காரியாபட்டி, 

தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்படும் உயிர் இழப்பு ஆகியவற்றை தடுக்க வேண்டும். திருச்சுழி அரசு கலைக் கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மிதலைக்குளம் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நரிக்குடி பஸ் நிலையம் அருகே விருதுநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், முன்னாள் யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சிவசாமி, காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பிரமணி, திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன், ஆவியூர் குண்டு குமார், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்