அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-12-17 18:14 GMT

வாணியம்பாடி

ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 பேரூராட்சி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெகன்,  பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட  செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர்வை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது குறித்தும், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி. சம்பத்குமார், உட்பட மாவட்ட, நகர ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்