அ.தி.மு.க. பிரமுகர் விபத்தில் பலி

விருதுநகர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் விபத்தில் பலியானார்.;

Update: 2023-08-21 19:04 GMT


நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒன்றிய அ.தி.மு.க. பிரமுகர் ஆறுமுகம் (வயது 62). இவர் நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் இரவில் வேனில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் எட்டூர் வட்டம் சோதனைச்சாவடி அருகே வேனை நிறுத்திவிட்டு ஆறுமுகம் சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த யோவான் (22) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆறுமுகம் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் யோவான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்